பனீர் பரோட்டா


பனீர் பரோட்டா

தேவையான பொருட்கள் :

பரோட்டா செய்ய :


கோதுமை மாவு - 2 கப்

உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

ஸ்டஃப்பிங் செய்ய :


பனீர் - 100 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
மல்லிதழை, புதினா - சிறிது
எண்ணெய் - 1/2 கப்       

செய்முறை : 


1. கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். 





2. மாவை ஐந்து உருண்டைகளாக பிரித்து கொள்ளவும். 




3. பனீரை அறைவெப்ப நிலையில் வைத்து நன்கு உதிர்த்து கொள்ளவும். 



4. அதனுடன் தூள் வகைகள், உப்பு, பொடியாக நறுக்கிய மல்லிதழை, புதினா ஆகியவற்றை நன்கு பிசிறி வைக்கவும். 




5. பனீர் கலவையையும் ஐந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 



6. ஒரு மாவு உருண்டையை எடுத்து உருட்டி அதனுள்ளே பனீர் உருண்டையை வைத்து சுற்றிலும் மடித்து திரும்பவும் மாவு தொட்டு பரோட்டாவாக தேய்த்து கொள்ளவும். 







7. தோசை கல்லை வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும். 




ருசியான பனீர் பரோட்டா தயார். 




இதே செய்முறை தான் ஆலு பரோட்டாவும், உள்ளே வைக்கும் ஃஸ்டப்பிங் மட்டும் தான் வேறுபடும். அதனை வேறொரு பதிவில் பகிர்கிறேன். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes