புடலங்காய் முட்டை பொரியல்


புடலங்காய் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள் :


புடலங்காய் - 1 
முட்டை - 1
வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன்
கடலைபருப்பு - 2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. புடலங்காயை தோல் சீவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.


2. கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 


3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


4. வெங்காயம் வதங்கியதும் கடலைபருப்பு, புடலங்காய் சேர்த்து வதக்கவும். 



5. பின்னர் தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும். 1/4 கப் நீர் சேர்க்கவும். 




6. புடலங்காய் வெந்து நீர் வற்றியதும்  முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கொத்தி விடவும்.




வித்தியாசமான சுவையில் புடலங்காய் முட்டை பொரியல் ரெடி.


அனைத்து குழம்பு வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes