சிக்கன் சமோசா

                                           
 
சிக்கன் சமோசா

தேவையான பொருட்கள் : 

மேல் மாவிற்கு :

மைதா மாவு - 2 கப் 
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

ஸ்டஃபிங் செய்ய : 

போன்லெஸ் சிக்கன் - 1/4 கிலோ 
வெங்காயம் - 1/2 கிலோ
கேரட் - 1 
பச்சை மிளகாய் - 3 
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன் 
உப்பு - 1 ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
மல்லிதழை - சிறிது  

பொறிப்பதற்கு எண்ணெய் - 1/4 லிட்டர்

செய்முறை :

1. மேல்மாவிற்கு மைதா மாவுடன், உப்பு, சூடான எண்ணெய் சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 




2. மாவை 2 மணி நேரம் ஊற விடவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக பிரித்து உருட்டி கொள்ளவும். 



3. வெங்காயம், கேரட், பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.



4. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். 


5. அதிலேயே இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். 


6. பச்சை வாசம் போனதும் சிக்கன் சேர்த்து பிரட்டி விடவும்.


7. தூள் வகைகள் சேர்த்து மசாலா வாசம் போகும் வரை வதக்கவும். மல்லிதழை சேர்க்கவும். 




8. மைதா உருண்டையை எடுத்து சப்பாத்தி கல்லில் சிறு வட்டமாக தேய்த்து கொள்ளவும். 


9. அதில் ஒரு கரண்டி சிக்கன் கலவையை நடுவில் வைக்கவும். 


10. பின்னர் தண்ணீர் தொட்டு முக்கோணமாக மடித்து வைக்கவும்.




11. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மடித்து வைத்துள்ள சமோசாக்களை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். 



சுவையான சிக்கன் சமோசா தயார்.


* காய்கறிகளை வைத்து வெஜ் சமோசா செய்யலாம்.
* காரம் குறைவாக விரும்பினால் பச்சை மிளகாயை குறைத்து கொள்ளலாம். 
* சிக்கனுக்கு பதிலாக மட்டன் கீமா வைத்து செய்தாலும் சுவை நன்றாக இருக்கும்.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes