வாழைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 2
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
செய்முறை :
1. வாழைக்காயை தோல் சீவி வட்டமாக ஒரு இன்ச் அளவில் நறுக்கி கொள்ளவும்.
2. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி, சீரக தூள், உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.
3. மசாலா சற்று ஊறியதும் அரிசி மாவு சேர்த்து பிரட்டி விடவும்.
4. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஒவ்வொரு வாழைக்காய் துண்டுகளாக பரவலாக வைத்து இருபுறமும் சிவந்ததும் வறுத்து எடுக்கவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் வறுவல் தயார்.
அனைத்து குழம்பு வகைகளுக்கும் பொருத்தமான சைட்டிஷ் ஆக இருக்கும்.












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...