உருளை பட்டாணி கறி

0 கருத்துகள்

 உருளை பட்டாணி கறி

தேவையான பொருட்கள் :

உருளை - 2

பட்டாணி - 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன் 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

கடுகு - 1/2 ஸ்பூன்

கடலைபருப்பு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து    

புதினா - சிறிதளவு

செய்முறை :

1. உருளையை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பட்டாணியை அலசி வைத்து கொள்ளவும்.


2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.




3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பின்னர் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உருளை பட்டாணியை சேர்த்து
 கலந்து விடவும்.




4. தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசம் போனதும்   சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.




5. உருளை வெந்ததும் புதினா மிளகு தூள் தூவி இறக்கவும்.



சுவையான உருளை பட்டாணி கறி தயார்.
















மஷ்ரூம் மிளகு வறுவல்

0 கருத்துகள்

 மஷ்ரூம் மிளகு வறுவல்


தேவையான பொருட்கள் :

மஷ்ரூம் - 1 பாக்கெட்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1 ஸ்பூன்

சீரக தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - 3/4 ஸ்பூன் 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

கறிவேப்பிலை - 1 கொத்து    

செய்முறை :

* மஷ்ருமை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். 


* பானில்எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.


*இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். 





* பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள் சேர்த்து பிரட்டி விடவும். 




 * மசாலா வாசம் போனதும் மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க
    தேவையில்லை.




மஷ்ரூம் வெந்து வரும்பொழுது மிளகு தூள், கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி விட்டு எண்ணெய் பிரிந்து வரும்பொழுது அடுப்பை அணைக்கவும்.   



 * சுவையான மஷ்ரூம் மிளகு வறுவல் தயார். 



சிக்கன் கட்லெட்

0 கருத்துகள்

 சிக்கன் கட்லெட்


தேவையான பொருட்கள் : 

சிக்கன் - 200 கிராம்
முட்டை - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்

செய்முறை : 

1.சிக்கனை சுத்தம் செய்து நன்கு அலசிக் கொள்ளவும். மிக்சியில் அரைத்து 
கொள்ளவும்.  




2. சிக்கனுடன் தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். 

3. பின்னர் அதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது மற்றும் தூள் வகைகள், உப்பு சேர்த்து அரைக்கவும். 


4. அரைத்த விழுதுடன் முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.  




5. பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் கலவையை சிறு சிறு உருண்டைகளாக தட்டி இருபுறமும் பொரித்து எடுக்கவும்.



சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.







பீட்ருட் பொரியல்

0 கருத்துகள்


பீ
ட்ருட் பொரியல்

தேவையான பொருட்கள் :

பீட்ருட் - 1
வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன் 
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1.பீட்ருட்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அல்லது  க்ரேட்டரில் துருவி கொள்ளலாம்.வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை  தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.



3. பின்னர் பீட்ருட், தூள் வகைகள் சேர்த்து 1/4 கப்  நீர் சேர்த்து வேக விடவும்.




4. பீட்ருட் வெந்ததும் தேங்காயை தூவி பிரட்டி 2 நிமிடம் கழித்து  அடுப்பை அணைக்கவும்.


சுலபமாக செய்ய கூடிய பீட்ருட் பொரியல் ரெடி.


அனைத்து குழம்பு வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

சிக்கன் கேஷு மசாலா

0 கருத்துகள்

சிக்கன் கேஷு மசாலா

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
புதினா -  1/2  கப்
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 20
வெள்ளை மிளகு - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரியை விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.


2. பானில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 


3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி, புதினா சேர்க்கவும்.



4. சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


5. தூள் வகைகள் சேர்த்து மசாலா வாசம் போனதும் முந்திரி விழுது சேர்த்து கலந்து விடவும். 




6. சிக்கன் வெந்து மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் பொழுது இறக்கவும்.

ருசியான சிக்கன் கேஷு மசாலா தயார். 


ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம். 



 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes